Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை பாதுகாப்புப் படையினரிடமிருந்து விடுவித்தால் மாத்திரம் போதாது மாறாக, மக்கள் மீள்குடியேறத் தக்க வகையில் அதற்குரிய அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
பல வருட காலமாக இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக வசித்து வரும் எமது மக்கள், தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கு தயார் நிலையில் இருக்கின்ற போதிலும், அதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இயலாத நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
பொருளாதார ரீதியில் இம் மக்கள் கடந்த பல வருட காலமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதுகாப்புப் படையினரிடமிருந்து விடுவிக்கப்படும் எமது மக்களின் காணி, நிலங்களில் எமது மக்கள் மீளக்குடியேறக்கூடிய வகையிலான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் இல்லாததால், மக்கள் மீளக் குடியேறுவதில் அக்கறை காட்டுவதில்லை எனக் கூற முடியாது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமே எமது மக்கள் அப் பகுதிகளில் நிம்மதியாக வாழ முடியும். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago