2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நிலமீட்பு விவகாரத்தில் ‘புதிய அணுகுமுறை வேண்டும்’

Kogilavani   / 2017 மார்ச் 21 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

“முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 20 நாட்களாக இரவு பகலாக நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், தமது போராட்டத்தின் வடிவத்தை மாற்றி புதிய அணுகுமுறையை கையாள வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைத்த அவர், “கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்வதால், அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனரே தவிர எவ்வித பயனும் இல்லை. அரசாங்கம், குறித்த விடயத்தைக் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில், போராட்ட வடிவத்தை மக்கள் மாற்ற வேண்டும். இதற்கு, சகல மாகாண சபை உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.   

கேப்பாபுலவில், 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகள், இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணியை ஆக்கிரமித்து வைத்துள்ள இராணுவத்தினர், அக்காணிகளில் பாரிய படைமுகாங்களை அமைத்துள்ளனர்.  

குறித்த காணிகளின் உரிமையாளர்கள், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 20 நாட்களாக, குறித்த இராணுவ முகாம் முன், நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X