Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜனவரி 27 , பி.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்
அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் கடந்த 23ஆம் திகதி முதல் ஏற்பட்டு வரும் நிலவெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (27) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலவெடிப்பு இடம்பெற்ற தோட்டப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொதுமக்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும், 500 மீற்றர் தூரத்தையும் சுற்றி மஞ்சள் பட்டி அடிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு தொடர்பில் பணிப்பாளர் கூறியதாவது,
'இங்கு நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய். இது ஒரு சாதாரண நில வெடிப்பு ஆகும். இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பு மயோசின் சுண்ணாம்பு பாறைகளால் ஆனது.
யாழ்ப்பாணத்திலுள்ள நிலாவரை நீருற்று, வில்லூன்றி தீர்த்தக்கேணி, கெருடாவில் குகை என்பன பல மில்லியன் காலத்துக்கு முன்னர் ஏற்பட்ட பாறை மாற்றங்களால் ஏற்பட்டதாகும்.
நிலத்தின் கீழுள்ள சுண்ணாம்பு பாறையில் ஏற்பட்ட சிறு விரிசலாக இது இருக்கக்கூடும். இது தொடர்பான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது, நிலத்தடி மண் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, சரியான விடயம் தெளிவுபடுத்தப்படும்' என்றார்.
19 minute ago
37 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
42 minute ago
1 hours ago