2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நெல்லியடியில் கைவைப்பு கந்தானையில் கைவிலங்கு

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி பிரதான வீதியில் அமைந்துள்ள நகைக்கடையின் கூரையைப் கடந்த 27ஆம் திகதி அதிகாலை பிரித்து நுழைந்து அக்கடையில் கொள்ளையிட்டதாக கூறப்படும் சந்தேகநபர், கந்தானைப் பகுதியில் வைத்து, புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நகைக்கடையிலிருந்து திருடப்பட்ட 10 பவுண் நகையும் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நகைக்கடையின் கூரையைப் பிரித்து உள்நுழைந்து அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 23 பவுண் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சீ.சீ.டிவி கமெராவின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை, கந்தானை பொலிஸாரின் உதவியுடன் கைது செய்தனர்.

சந்தேகநபரை, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நெல்லியடி பொலிஸார் மேலும் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .