Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆறுமுகநாவலர் விழா எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில்; நடைபெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவரும் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினருமாகிய பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் விழா அனுசரணையாளரான கரிகணன் அச்சக அதிபர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கல விளக்கேற்றுவர். மக்கள் வங்கி உத்தியோகத்தர் சி.சசீவன் நாவலர் வணக்கப்பா இசைப்பார்.
தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ந.ஜங்கரன் வரவேற்புரையையும் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தொடக்கவுரையையும் ஆற்றுவர். 'நாவலர் கனவு' என்ற பொருளில் சிரேஷ்ட பேராசிரியர் நா.சண்முகலிங்கன் சிறப்புரையாற்றுவார்.
நாவலர் வழியில் நாம் நடக்க பெரிதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவரின் எப்பணி என்ற பொருளில் தமிழ்ச்சங்க உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் கருத்தாடற்களம் இடம்பெறும்.
இதில் ஆன்மீகப் பணியே என கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலஷண்முகனும் கல்விப் பணியே என சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி ஆசிரியர் ச.மார்க்கண்டுவும் சமூகப்பணியே என யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சி.ரமணராஜாவும் அரசியல் பணியே என உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரனும் கருத்துரைப்பர்.
நிறைவு நிகழ்வாக கலைமாமணி சிறுப்பிட்டியூர் சத்திதாஸ் வில்லிசைக் குழுவினர் வழங்கும் காலத்தை வென்ற காவலன் என்ற பொருளில் வில்லிசை இடம்பெறும். தமிழ்ச்சங்கச் செயலாளர் இரா.செல்வவடிவேல் நன்றியுரையாற்றுவார். உபசெயலர் லோ.துஷிகரன் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்துவார்.
15 minute ago
31 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
2 hours ago
3 hours ago