2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நிவாரண உதவியை பெற்றுத்தருமாறு கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கடிதம்

Gavitha   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுத் தருமாறு, கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர்கள்  கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர்கள், சுண்டிக்குளம் கடல்நீரேரியில் மேற்கொள்ளப்படும் இறால் உற்பத்தியை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். தற்போது இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் தொடர்ச்சியாக நீர் வெளியேறிய வண்ணம் உள்ளதால் இறால் உற்பத்திகள் பாதிப்படைந்துள்ளது.

இதனால் இறால் உற்பத்தியை நம்பியுள்ள கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள கடற்றொழிலாளர்கள், அக்கடிதத்தில் தமக்கு தற்காலிக நிவாரணத்தை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X