Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 02 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
இலங்கை கடற்பகுதியில், இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக, மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலில், யாழ். மாவட்ட இழுவைப் படகு தொழிலாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மேற்படி இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர இணக்கம் காணப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், இலங்கை கடற்பகுதியில் இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தும் தனிநபர் சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
இந்நிலையில், மேற்படி சட்டமூலம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் ஒன்று, யாழ். நகரில் உள்ள விடுதி ஒன்றில், இன்று (02) மாலை நடைபெற்றிருந்தது.
மேற்படி கலந்துரையாடலின் நிறைவில், அனைவரும் செல்ல முற்பட்டபோது, அங்கிருந்த மீனவ சமூகத்தின் குறிப்பிட்ட சிலர், தமது கருத்துக்களைக் கேட்காது தமது பிரச்சினை தொடர்பாக பேச்சுக்களை நடாத்தாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதாகக்கூறி அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டனர்.
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago