Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரையோர பயணிகள் போக்குவரத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு யாழ். தீபகற்பத்திலுள்ள அனைத்து படகுத்துறைகளையும் அபிவிருத்திச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எலுவைதீவிலுள்ள படகுதுறை நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரால் பிரியால் டி சில்வா தெரிவித்தார்.
யாழ். தீபகற்பத்திலுள்ள துறைமுகங்களை அபிவிருத்திச் செய்வது தொடர்பான கலந்துரையாடலின்பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
படகுத்துறையை நிர்மாணிக்கும் பொருட்டு, கடற்படையினரின் பூரண ஒத்துழைப்பு பெறப்படுவதினால் இந்நிர்மாணப் பணிகளின் பொருட்டான செலவு குறைவடைந்துள்ளது.
யாழ். தீபகற்பத்தில் 11 தீவுகள் உள்ளன. அத்தீவுகளுள் 4 தீவுகளில் மாத்திரம் அதாவது குறிக்கட்டுவான், நைநாதீவு, அனலைதீவு, எலுவைதீவு, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் ஆகிய தீவுகளிலேயே மக்கள் வாழ்கின்றார்கள். நெடுந்தீவே யாழ். நகரிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்துள்ள தீவாகும். ஏனைய தீவுகள் நகரிலிருந்து 2 -3 கிலோமீற்றர்கள் தொலைவிலேயே அமையப்பெற்றுள்ளன.
ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் ஆகிய தீவுகளுக்கு தரைவழிப் பாதைகள் காணப்படுகின்றன. ஏனைய அனைத்து தீவுகளுக்கும் கடல் வழியே பயணிக்க வேண்டியுள்ளது. பண்டைய காலம் தொட்டு இத்தீவுகளுக்கு அருகாமையில் படகுகளை நிறுத்தி வைப்பதற்கான படகுத்துறைகள் காணப்பட்டபோதிலும், பிற்காலத்தில் அவை ஒழுங்கான முறையில் பேணப்படவில்லை.
இலங்கை கடற்படையின் முழுமையான ஒத்துழைப்புடன் இவ்வனைத்து படகுத்துறைகளையும் நிர்மாணிப்பதே இவ்வரசாங்கத்தினதும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.
இத்திட்டத்தின் கீழ் தற்போது எலுவை, அனலை தீவுகளில் படகுத்துறைகளை அபிவிருத்திச் செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எலுவை தீவில் படகுத்துறையினை அபிவிருத்திச் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago