Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 29 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
வடக்கு விவசாயிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள படை புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (29) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.தெய்வேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி, முருங்கன் விவசாய ஆராய்ச்சி உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.இராஜேஸ்கண்ணா, பிரதி மாகாணப் பணிப்பாளர் எஸ்.அஞ்சனாதேவி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான விழிப்புணர்வை வழங்கியிருந்தனர்.
இதன்போது படைப் புழுவின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே எவ்வாறு இனங்காண்பது, அதனை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்த இரசாயன முறையில் கையாள வேண்டிய விடயங்கள் என்பவை தொடர்பான அறிவுறுத்தல் அதிகாரிகளால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் படைப் புழு தாக்கத்தின் வெளிப்பாடு எவ்வாறாக இருக்கும் என்பது தொடர்பான காணொளி விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .