2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

படிகள் வழங்கும் முன்பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடமாகாண சபையால் தற்போது 1,800 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு படிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு முதல் 2,200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு படிகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (17) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

 'வடமாகாணத்திலுள்ள 1,653 முன்பள்ளிகளில் 42 ஆயிரத்து 23 மாணவர்கள் (42,023) கல்வி பயில்கின்றனர். முன்பள்ளிகளில் 3,085 முன்பள்ளி ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 1,800 பேருக்கே இதுவரை காலமும் வடமாகாண சபை மாதாந்தம் 4,000 ரூபாய் என்ற படியை வழங்கி வந்தது. 2016ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையானது 2,200 என அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X