2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பட்டப்பகலில் வீட்டை உடைத்த இளைஞன் மடக்கி பிடிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வழிப்பறி, கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞனை கட்டப்பிராய் பகுதியில் வைத்து பொதுமக்கள் மடக்கி பிடித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று திங்கட்கிழமை(01) இடம்பெற்றுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 25 வயது நிரம்பிய இளைஞனே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அப் பகுதியிலுள்ள வீடொன்றை உடைத்து திருட முற்பட்டுள்ளனர். இதனை அவதானித்த அயல் வீட்டு பெண், அபாயக்குரல் எழுப்பியதையடுத்து, அங்கு  ஒன்று கூடிய இளைஞர்கள், குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X