2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பத்து வகையான நெல்லினங்கள் பயிரிடப்பட்டுள்ளன

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விதை உற்பத்தி பண்ணையில் தற்போது பத்து வகையான நெல்லினங்களின் விதை உற்பத்திகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல்லினங்கள் ஆராய்ச்சிகளுக்காகவும் பயிரிடப்பட்டுள்ளதாக விதை உற்பத்தி  பண்ணை, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள விதை உற்பத்தி பண்ணையில் நெல்லினங்களின் விதை உற்பத்திகள், அரிய நெல்லினங்களின் ஆராய்ச்சிகள் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது பத்து வகையான நெல்லினங்கள் விதை உற்பத்திக்காக பயிரிடப்பட்டு விதை உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த விதை நெல்லினங்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் மண் வளம், நோய் எதிர்ப்பு தன்மை, அதிக விளைச்சல் என்பவற்றுக்கு ஏற்ற வகையில்; தெரிவு செய்யப்பட்டு விதை உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்;டுள்ளன.

இதனைவிட, அருகி வரும் பாரம்பரிய நெல்லினங்கள், புதிய நெல்லினங்கள், கலப்பு விதைகளற்ற நெல்லினங்கள், இயந்திரங்கள் மூலமான செய்கை மூலம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல்லினங்கள் ஆராய்ச்சிகளுக்காக பயிரிடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X