2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பனை சார் கண்காட்சியும் விற்பனையும்

Gavitha   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில், 'ஞாலத்தில் புதுமைபுகும் தாளம்' என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சியும் விற்பனையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டது.  

பனை சார் உற்பத்திகள், புதிய தொழில்நுட்பம், ஆய்வரங்கம் மற்றும் விற்பனையுடன் கூடிய வகையில் இந்தக் கண்காட்சி இடம்பெறுகின்றது.

பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் தலைமையில் ஆரம்பமாகிய இந்தக் கண்காட்சியை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்து வைத்தார். இந்தக் கண்காட்சி தொடர்ந்து 3 தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

பனை சார் உணவு மற்றும் பாவனைப் பொருட்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பசுபதி சீவரட்ணம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X