2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பயணிகள் கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது

Mayu   / 2024 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் செவ்வாய்க்கிழமை  (20​) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அன்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்நிலையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .