2025 மே 05, திங்கட்கிழமை

பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடுமாறு பணிப்புரை

Niroshini   / 2020 நவம்பர் 19 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் வெளிவாரிக் கற்கைகளுக்கான பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பணித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த வணிகமாணி (பழைய பாடத்திட்ட) பரீட்சை முடிவுகள் தாமதமாவது குறித்து பரீட்சார்த்திகளால் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இடம்பெற்ற பல்கலைக்கழக மூதவைக் கூட்டத்தில் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் பணிப்பாளரிடம் துணைவேந்தர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் பற்றி பணிப்பாளர் மற்றும் கற்கை நெறி இணைப்பாளர் ஆகியோர் விளக்கமளித்தனர்.

உள்வாரியாக நடத்தப்படும் பரீட்சைகளின் முடிவுகளை இரண்டு மாத காலத்தினுள் கையளிப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோலவே வெளிவாரிப் பரீட்சை முடிவுகளையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X