2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறையில் போராட்டம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்,  எம்.றொசாந்த்

சம்பள முரண்பாடு மற்றும் சேர். ஜோன் கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிராக, யாழ். பருத்தித்துறை பஸ் நிலையத்தில், இன்று  (09) காலை 11 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்மொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன இணைந்து,  இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முன்னதாக பருத்தித்துறை நகரில் இருந்து பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பருத்தித்துறை நவீன சந்தை சுற்று வீதி ஊடாக பஸ் தரிப்பு நிலையத்தை  வந்தடைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், வடமராட்சி வலய ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கத்தை சேர்ந்த 14 சங்கங்களின் பிரதிநிதிகள் என சுமார் நூறு பேர் வரை கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X