2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பரீட்சை வினாத்தாள்கள், பரீட்சைக்கு முன்னர் வெளிவந்தது

Gavitha   / 2016 நவம்பர் 08 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

எதிர்வரும் 15ஆம் திகதி வடமாகாண மட்டத்தில் நடைபெற உள்ள பரீட்சை வினாத்தாள்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளி வந்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்.

வடமாகாண சபையின் 65ஆவது அமர்வில் செவ்வாய்க்கிழமை (08) உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வடமாகாண மட்டத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 11 க்கான வரலாற்று பாட வினாத்தாள்கள், பரீட்சை திகதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் கடந்த 4ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியாகி உள்ளது. இந்த வினாத்தாள்கள் எவ்வாறு வெளியானது என்பது தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்த அவர், வினாத்தாளை, கல்வி அமைச்சரிடம் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X