2025 மே 02, வெள்ளிக்கிழமை

பற்றுச் சீட்டுக்கள் இன்றி பணம் அறவிட முடியாது

Princiya Dixci   / 2022 மே 04 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் கமநல  சேவை நிலையத்துக்குட்பட்ட கோரக்கன் கட்டுப் பகுதியில் இவ்வாண்டுக்கான  சிறு போக செய்கை தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை  என்பதுடன், பற்றுச் சீட்டுக்கள் இன்றி பணம் அறவிட முடியாது என பரந்தன் கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் தெரிவித்தார்.

கோரக்கன் கட்டுப் பகுதியில், அப்பகுதி கமக்கார அமைப்பினால் எந்தவித பயிர் செய்கை கூட்டங்களும் நடத்தப்படாது, சிறுபோக செய்கைக்கான வாய்க்கால் அமைப்புக்கென ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் மிக அவசரமாக  தலா  2,500 ரூபாய் வீதம்  பற்றுச் சீட்டுக்கள் எதுவுமின்றி அறவிடப்பட்டுள்ளதாக  குறித்த பிரதேச  விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள  நீர் பாசன  பிரதேசத்துக்குள்  உள்வாங்கப்படாத குறிப்பிட்ட அளவு காணிகளை இம்முறை பரீட்சார்த்தமாக உள்வாங்கி, விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைவாக குறித்த பிரதேசத்தில்  நீர்ப் பாசனக் கட்டுமானங்கள்  வாய்க்கால்கள் இல்லாத காரணத்தால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே  பயிர் செய்கை மேற்கொள்வதாக மாவட்ட அரச அதிபர் தலைமையில்  இறுதியாக  நடைபெற்ற  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகிய வற்றின்  எந்தவித அனுமதிகளுமின்றி வாய்க்கால் அமைப்பதற்கென ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் மேற்படி பணம் அறவிடப்பட்டிருப்பதாக விவசாயிகளால்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X