2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பளையில் மீள்குடியேறிய மக்கள் விவசாயச் செய்கையில் ஆர்வம்

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேறிய பகுதிகளில்  மக்கள் விவசாயச் செய்கையில் ஆர்வமாக ஈடுபட்டு வருவதாக பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா திங்கட்கிழமை (07) தெரிவித்தார்.

'பளை, வேம்படுங்கேணி, அரசர்கேணி, கிளாலி ஆகிய இடங்களில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு, அம்மக்கள் தங்களின் வாழ்வாதாரமான விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ளனர். நிலக்கடலை, மிளகாய், பயறு, உழுந்து, அவரை, கௌப்பி ஆகிய செய்கையில் அவர்கள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களின் விவசாய நடவடிக்கைகளை வினைத்திறனாக மேற்கொள்ள தேவைகள் பல உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்' என்று அவர் இதன்போது கூறினார்.  

தங்கள் பிரதேசங்களில் காணப்படும் குளங்களை புனரமைக்க வேண்டும், பழைய கிணறுகளை தூர்வார வேண்டும், புதிய கிணறுகள் அமைக்க வேண்டும் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் பெற்றுத்தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை எம்மிடம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்டச் செயலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் தேவைகள் நிலைவேற்றப்பட்டால் அப்பகுதியில் விவசாயமானது முன்னேற்றமடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .