2025 மே 19, திங்கட்கிழமை

பஸ் உரிமையாளருக்கு சிறை

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே வழித்தட அனுமதிப் பத்திரமின்றி அதிசொகுசு பயணிகள் பஸ் சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ் உரிமையாளருக்கு, 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் நீதிமன்ற  மேலதிக நீதவான் காயத்திரி சைலவன், நேற்று உத்தரவிட்டார்.

அத்துடன், ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறின் குற்றவாளி 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்றும் மன்று கட்டளையிட்டது.

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே அதிசொகுசு பஸ் சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ்ஸிடம் வழித்தட அனுமதிப் பத்திரம் இல்லை என்று பொலிஸாரால் 2018ஆம் ஆண்டு நடுப்பகுதியில் குறித்த பஸ் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இதன்போது, பஸ் உரிமையாளர், அப்போது தான் சுற்றவாளி என்று மன்றுரைத்திருந்தார்.  அதனால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில், குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X