2025 ஜூலை 19, சனிக்கிழமை

பஸ் சேவை மாற்றுவழியினூடாக நடைபெறுகின்றது

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி, முக்கொம்பன் கிராமத்துக்கான பஸ் சேவை மாற்று வழியினூடாக நடைபெறுவதாக கிளிநொச்சியின் இலங்கை போக்குவரத்துச்சபையின் முகாமையாளர் எஸ்.ஜீவானந்தம் புதன்கிழமை (13) தெரிவித்தார்.

அக்கராயனிலிருந்து முக்கொம்பன் கிராமத்துக்கான வீதி சேதமடைந்துள்ளதால் அதனூடான பஸ் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால், பரந்தன், பூநகரி வழியாக பத்தாம் கட்டையிலிருந்து முக்கொம்பன் கிராமத்துக்கான பணிகள் நடைபெறுகின்றன. அக்கராயனிலிருந்து முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற போக்குவரத்துச் சேவை வீதி சீர்செய்யப்பட்டதும் தொடர்ந்தும் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X