2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பஸ் மீது கல் வீச்சு

Princiya Dixci   / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்
 
பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் மீது, இன்று வியாழக்கிழமை (17) அதிகாலை 5.20 மணியளவில் இனந்தெரியாதோர் கற்களால் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கே. கந்தசாமி தெரிவித்தார்.  

நெல்லியடி கொடிகாமம் வீதி அணஞ்சிலடியில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பஸ்ஸின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்தன. எனினும், பயணிகளுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

சம்பவத்தையடுத்து, பருத்தித்துறை டிப்போவில் இருந்து மாற்று பஸ்ஸொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அதில் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடிந்ததாக, முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X