2025 மே 05, திங்கட்கிழமை

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், என்.ராஜ்

கிளிநொச்சி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நாளையே தீர்மானிக்கப்படும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஆரம்பித்த அன்றே மீண்டும் பூட்டப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் நாளை (30) தீர்மானிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் கிடைக்கவுள்ள பிசிஆர்  முடிவுகளின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனின் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள துறைசார் அதிகாரிகளுடனான கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் லட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X