2025 மே 19, திங்கட்கிழமை

பாட்டுப் பெட்டிக்குளிருந்து இறைச்சி மீட்பு

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசு மாட்டினை களவாடி வெட்டி, அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியில் பசுமாடு ஒன்றினை களவாடி அதனை இறைச்சியாக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த முச்சக்கர வண்டியினை சோதனையிட்ட போது, நூதன முறையில் பாட்டு பெட்டிக்குள் இறைச்சி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அதனை மீட்டனர்.

இறைச்சியை கொண்டு சென்ற இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இரு இளைஞர்களும் யாழ்.பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X