Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 26 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் தனியாருக்கு சொந்தமான காணிகள் பல புதர்மண்டிக் காணப்படுவதால், நோய்ப்பரவல் மற்றும் சமூக சீர்கேடுகள் ஏற்படுவதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது. இந்த அவலநிலையிலிருந்து எமது பிரதேசத்தை பாதுக்காக்க வேண்டியது எமது சபையின் கடமையாகும் என, வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி ஜெயகாந்த் அனுஷியா வலியுறுத்தியுள்ளார்
வேலணை பிரதேச சபையின் அமர்வு தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வேலணை பிரதேச சபைக்குட்பட்ட எல்லைக்குள் புதர் மண்டிக் காணப்படும் தனியாருக்கு சொந்தமான காணிகள் பல காணப்படுகின்றன. இவற்றை பிரதேச சபை இனங்கண்டு அவற்றை சபையின் பொறுப்பிலெடுத்து துப்பரவாக்கி குறித்த காணிகளை சபையின் ஆளுகைக்குள் கொண்டுவருவதுடன் அக்காணிகளுள் குறிப்பிட்ட ஒரு கால எல்லையை நிர்ணயித்து உரிமையாளர்கள் வந்து பொறுப்பெடுக்குமாறு எச்சரிக்கை பதாகை போடப்பட்டுள்ளது.
“அவ்வாறு உரிமையாளர்கள் உரிமை கோரி வருமிடத்து அதற்கான பராமரிப்பு செலவு மற்றும் ஒரு தொகை தண்டம் அறவிடுவதன் மூலம் டெங்கு நோயின் தாக்கத்தையும் அதன் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும். அத்துடன், சமூகச் சீர்கேடுகளையும் தடுப்பதனுடன் எமது பிரதேசத்தை தூய்மையாக்க முடியும்” என்றார்.
“அந்தவகையில், எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள புதர்மண்டிக் காணப்படும் காணிகளை சபை இனங்கண்டு, அவற்றை துரித கதியில் மேற்குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இச்சபையில் ஒரு பிரேரணையாக முன்வைக்கின்றேன்” எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .