Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 மார்ச் 21 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமன்னார் வெளிச்ச வீட்டுக்கு 5 கடல் மைல் தொலைவில் 912 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கொண்ட பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
27 மூடைகளில் பொதியிடப்பட்டு 912 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
27 மூடைகளில் பொதியிடப்பட்டு, கண்ணாடியிலைப் படகொன்றில் இவை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டபோதே இன்று வியாழக்கிழமை (21) அதிகாலை கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மன்னார் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளையும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .