Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ் அச்சுவேலியில் உள்ள புத்தகக் கடையொன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இப் புத்தகக் கடையை நேற்று (27) மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.
ஆனாலும் அங்கிருந்த பொருட்களும் அந்தக் கடையும் முற்றுமுழுதாக எரிந்துள்ளது.
தீ ஏற்பட்டதுக்கான காரணங்கள் எவையும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago