2025 மே 19, திங்கட்கிழமை

புல்லைப் பதப்படுத்தும் பயிற்சி

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

 

மாடுகளுக்கான புல்லை அனைத்துக் காலத்திலும் தடையில்லாது வழங்கும் நோக்குடன், புல்லைப் பதப்படுத்தும் முறை தொடர்பில், பண்ணையாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுவதாக, யாழ்ப்பாணம் மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரப் பராமரிப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புல்லைப் பதப்படுத்தி வைத்திருக்கும் சைலோஜ் முறைமையே, பண்ணையாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றது.

புல் அதிகம் கிடைக்கும்போது சீனிக் கரைசலுடன் சேர்த்துப் புல்லைப் பாதுகாக்கும் இந்த இலகுவான முறை மூலம், 6 மாதங்கள் வரைப் புல்லைச் சேமிக்க முடியும். புல் தட்டுப்பாடான காலத்தில் இவற்றைப் பயன்படுத்த முடியும்.

இந்த வருடத்தில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 16 பேருக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, புல் வெட்டும் உபகரணமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X