2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘பூஞ்செடி என நினைத்து கஞ்சா செடி வளர்த்தேன்’

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா செடியை பூஞ்செடி என நினைத்தே அதனை அழிக்காது விட்டேன் என, கஞ்சா வளர்த்தார் என கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக அமைப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) சென்ற பொலிஸார் அங்கு வளர்ந்த கஞ்சா செடியை மீட்டதுடன் அங்கிருந்த தென்னிலங்கை தெல்தெனியை சேர்ந்த கட்டட தொழிலாளியையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்று (11) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அங்கு நடைபெற்ற வழக்கு விசாரணையின்  போது, கட்டடத்தில் அந்த செடி தானாகவே வளர்ந்தது. அதனை பூஞ்செடி என நினைத்தே அகற்றாது விட்டேன் என கட்டட தொழிலாளி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த நபரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசு பிணையில் செல்ல மன்று அனுமதித்தது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X