எம். றொசாந்த் / 2018 மே 09 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த பிரித்தானிய பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரயில்வே உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
பிரித்தானியாவை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (07) கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த ரயிலில்இ வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார்.
இதன்போது குறித்த ரயிலில் பயணிகள் குறைவாக இருந்தமையை பயன்படுத்திக் கொண்ட சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.
இதனை அவதானித்த பயணிகள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்துள்ளார்.
மேலும்இ நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது பொலிஸாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் அனைவரையும் மிரட்டியுள்ளார்.
ரயில் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும்இ அந்த சம்பவம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்ததுடன்இ சம்பவம் தொடர்பான காணொளியையும் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் ரயில்வே ஊழியரைக் கைது செய்த யாழ்.பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (9) முற்படுத்தினர்.
சந்தேகநபரை பிணையில் விடுவிக்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து அவரை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
36 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
36 minute ago
44 minute ago
53 minute ago