Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று ஆராய்வு திட்டம் ஒன்றுக்காக யாழ் மாநகரசபைக்கு நேற்று (06) விஜயம் செய்திருந்தனர்.
யாழ் மாநகரின் கழிவகற்றல் செயற்றிட்டம் தொடர்பில் (வீட்டுக்கழிவு, திண்மக்கழிவு) ஆராய்ச்சி செயற்றிட்டம் ஒன்று முன்னெடுப்பதாகவும், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நேரில் வருகை தந்ததாகவும் அக் குழு தெரிவித்தது.
குறிப்பிட்ட மாணவர் குழாமினை மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் சந்தித்து மாநகரின் கடந்தகால மற்றும் தற்போதைய கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம், அதில் மாநகரசபை மற்றும் மாநகர மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள். என்பவற்றுடன், எதிர்காலத்தில் இக் கழிவகற்றல் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பொறிமுறை தொடர்பிலும் விளக்கினார்.
மேலும் தற்போதைய மாநககரின் பொதுவான செயற்பாடுகள், நடைமுறைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பிரதம பொறியியலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago