Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 22 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச சபை தவிசாளர் தா.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில், வீடுகள் மற்றும் கடைகளில் தேங்கும் கழிவுகளை சிலர் வீசுவதால் வீதியால் செல்வோர் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். அது தொடர்பில் பலர் சபைக்கு முறைப்பாடும் வழங்கியுள்ளனர்.
கழிவுகளை சேகரிப்பதற்கு என நல்லூர் பிரதேச சபையால் கழிவுகளை கொட்டும் இடம் என அடையாளப்படுத்தப்பட்டு அங்கு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றினுள் கழிவுகளை தரம் பிரித்து கொட்டுவதன் மூலம் கழிவகற்றல் நடைமுறையை சபையால் உரிய முறையில் மேற்கொள்ள இலகுவாக இருக்கும்.
அதனை விடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் கழிவுகளை வீசுவோரை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
பொது இடங்களில் கழிவுகளை வீசுவோரை மடக்கி பிடிக்க சபை ஊழியர்களை உள்ளடக்கிய விசேட அணி உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் கழிவுகளை வீசுவோரை இனம் கண்டு, அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.
அதேவேளை யாழ்.மாநகர சபையினால் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களை இனம் காண்பதற்கு, விசேட அணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
18 May 2025