2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் அசமந்தத்தால், தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் அசமந்ததால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் ஊடாக தப்பிச் சென்ற நிலையில், அது குறித்து பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு முறைப்பாட்டாளரின் உறவினர்கள் கொண்டு சென்றதை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் மீண்டும் கைது செய்தனர்.

கோப்பாய் தெற்கை சேர்ந்த குடும்பஸ்தரான இளைஞர் ஒருவர் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தை) அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார்.

அதனால் காயங்களுக்கு இலக்கானவர் தாக்குதலாளியிடமிருந்து, தப்பித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அதன் போது தாக்குதலாளி, தனது மோட்டார் சைக்கிளில் கொட்டனுடன் வந்து,  பொலிஸ் நிலையத்தினுள் புகுந்தும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார். அவ்வேளை தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரிய போது பொலிஸார் அசமந்தமாக நடந்து கொண்டதால் தாக்குதலாளி பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, உடனடியாக சந்தேகநபரை கைது செய்யுமாறு பொறுப்பதிகாரி பொலிஸாருக்கு பணித்தார். அதனை அடுத்து சந்தேக நபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அதேவேளை குறித்த நபரின் தாக்குதலுக்கு இலக்கானவர் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.

குறித்த தாக்குதலாளியான சந்தேகநபருக்கும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிஸாருக்கும் இடையில் நல்லுறவு காணப்படுவதாக முறைப்பாட்டாளர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X