Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
ஓட்டோவில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தான் பயணிப்பதற்கான பணத்தைக் கொடுக்காது முரண்பட்டு விட்டு, தன்னை தாக்கியதாக, எனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக, பாதிக்கப்பட்டவரின் மனைவி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று முறையிட்டுள்ளார்.
யாழ். நகரப் பகுதியில், நேற்று காலை ஓட்டோவில் பயணித்த சிவில் உடையில் இருந்த பொலிஸார், ஓட்டோ சாரதி தன்னைத் தாக்கியதாக தெரிவித்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தார்.
இதையடுத்து, சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில், ஓட்டோ சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ஓட்டோ சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தனது கணவன் பொலிஸாரால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.
ஓட்டோவில் பயணித்தமைக்கான பணத்தைக் கேட்டபோது, முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து எனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
21 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
43 minute ago