2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’பொலிஸாரை இடமாற்றினால் குற்றங்கள் குறையும்’

Kogilavani   / 2017 ஜூன் 28 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஷ்ணகுமார்

'கிளிநொச்சி முழங்காவில் பொலிஸார், அதே பொலிஸ் நிலையத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றுவதால், அப்பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாத நிலைமை காணப்படுகின்றது. அதனால், பொலிஸாரை குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இடமாற்றம் செய்தால், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்' என, பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன.

முழங்காவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு மரங்கள் வெட்டப்பட்டு, வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இது தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கினால், அது குறித்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தகவல் வழங்கப்படுகிறது. இதனால், இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதென, பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போதும் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸாரின் செயற்பாடுகள் காரணமாகவே, இவ்வாறான குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளது. இதனால், நீண்டகாலமாக ஒரே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் முழங்காவில் பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்குங்கள் எனவும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போது, அவ்வமைப்புகள் கோரின.

இருப்பினும், இதுவரையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு ஆதரவாகச் செயற்படாமல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாலேயே, முழங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதச்  செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்று, அவ்வமைப்புகள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X