2025 ஜூலை 05, சனிக்கிழமை

போதையற்ற தேசத்தை உருவாக்குதல் நிகழ்ச்சித் திட்டம்

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


போதையற்ற தேசத்தை உருவாக்குவதன் ஊடாக வளமான தேசத்தை சந்ததியினரிடம் கையளிப்பதற்கு நேற்று முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு 'நான் போதையை எதிர்க்கிறேன்' என்னும் தொனிபொருளில் நிகழ்வுகள் நேற்று (24) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தால் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்களான சிறுநீரக நோய்தடுப்பு, பிள்ளைகளை பாதுகாப்போம், சுற்றாடல் பாதுகாப்பு, உணவு உற்பத்தி, போசாக்கு திட்டம், வனரோபா ஆகிய திட்டங்களின் முன்னேற்ற நகர்வுகள் தொடர்பாகவும் இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.

யாழ்.  மாவட்ட செயலணி குழுவும் அங்கஜன் இராமநாதனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. போதை ஒழிப்பிற்காக விசேடமாக கிராம மட்டத்தில் கண்காணிப்பு குழுக்களை உருவாக்குவதற்கும் ஆலாசனை வழங்கப்பட்டது.

நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், கிராம மட்ட அமைப்புக்கள், மற்றும் திணைக்கள துறைசார் அதிகாரிகள், பொலிசார் என பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .