2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

போதையில் பாம்பை பிடித்தவர் மரணம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளியன்தோட்டம், உடுப்பிட்டியில் நேற்று (30) இரவு மதுபோதையில் நாக பாம்பை பிடித்தவர், அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மகேசன் தவம் (வயது-55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், வீட்டினுள் நாக பாம்பு ஒன்றைக் கண்டதும், அதனை பிடித்து, அயலில் உள்ள காணியில் வீசிவிட்டு நித்திரைக்குச் சென்றுள்ளார்.

பின்னர், நித்திரையிலிரந்து திடீரென எழுந்த அவர், தனக்கு நெஞ்சு வலிப்பதாக தண்ணீர் கேட்டுக் குடித்துள்ளார். அவர், தொடர்ந்தும் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அதனால் வீட்டில் இருந்தோர், அவரை, மந்திக்கை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது கையில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X