2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

போதை வியாபாரம்: 19 வயது மனைவி கைது

Niroshini   / 2021 நவம்பர் 04 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-எம்.றொசாந்த்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 19 வயதான இளம் பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவர் என அறியப்படும் நபர், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் ஆவார்.

இவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், பொலிஸார் அவரை தேடியதாகவும் பின்னர் இருவரும் மல்லாகத்தில் இருந்து வெளியேறி தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், கடந்த பல நாள்களாக சந்தேகநபர்களை கண்காணித்து வந்த நிலையில், நேற்று (04) மாலை, குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .