Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
“வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்துவதற்காக, கல்விக்கு தன்னை அர்ப்பணித்து அதனை சீர்திருத்தி தரக்கூடிய ஒரு போராளியை நான் நேற்று கல்வித்துறையின் செயலாளராக நியமித்துள்ளேன்” என்று, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில், யாழ். இந்தியத்துணைத் தூதரகம் வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து, இன்று (21) ஏற்பாடு செய்த உலக யோகா தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்துவதற்காக கல்விக்கு தன்னை அர்ப்பணித்து அதனை சீர்திருத்தி தரக்கூடிய ஒரு போராளியை நான் நேற்று கல்வித்துறையின் செயலாளராக நியமித்துள்ளேன் என்றார்.
கடந்த எட்டு வருடங்களாக ஆளுநரின் செயலாளராக பாரிய பொறுப்புக்களோடு கடமையாற்றியவர். இனி எங்கள் தேசத்தின் அடிப்படையாக இருக்க வேண்டிய கல்வி, நம் தேசத்தின் மைந்தனை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் கல்வித்துறையை சீர்செய்வதற்காக கல்வி அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
நாங்கள் ஒரு சமுதாயத்தை அடிப்படையாக பார்க்கும் போது மூன்று விடயங்களை குறித்து அந்த சமுதாயத்தின் உண்மையான தன்மையை உணரலாம். ஒன்று, அந்த சமுதாயம் பொது இடங்களை பாவிக்கும் விதம். இலங்கையில் மூன்று மடங்கு அதிகமாக வீதி விபத்துக்கு முகம்கொடுக்கும் ஒரு மாகாணமாக வடமாகாணம் உள்ளது.
அதற்கு காரணம், ஒழுங்கின்மை. நேரத்தை பாராமரிக்க தெரியாது நடத்தல் ஆகும்.
இரண்டாவதாக, ஒரு ஜனசமூகம் தன்னுடைய சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை எப்படி பராமரிக்கின்றது என்பது, முக்கிய காரணம் அந்த சமூகத்தின் ஆன்மாவை பற்றி அறிவதற்கு.
வடமாகாணத்தை பொறுத்தவரையில் எங்கள் அழுக்குகளை நாங்கள் பராமரிக்கும் விதம் எங்கள் நாகரிகத்துக்கு முரணானது அல்ல. ஆகையாலே, நகரபிதாவுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். இது எங்கள் நாகரிகத்தின் பிரச்சினை.
மூன்றாவதாக, ஒரு சமுதாயத்தின் அடிப்படையை காண்பதற்கு அந்த சமுதாயத்தின் ஆன்மீகத்துறை முக்கியமானதாகும். எனவே, இந்த யோகா தினம் எங்கள் சமுதாயத்துக்கும் உங்களுக்கும் எனக்கும் இந்த மூன்று விடயங்களிலும் ஒரு சரியான திசையில் பாதையை அமைப்பதற்கு சரியாக இருக்கட்டும் என்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago