2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நாளை மேல் நீதிமன்றத்தில்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு நாளை புதன்கிழமை (10) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் காலநீடிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

புங்குடுதீவு மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு வருடமாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று, கடந்த மே மாதம் 11ஆம் திகதி காலநீடிப்புக்காக மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 3 மாதங்களுக்கு காலநீடிப்புச் செய்து மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார். அந்த காலநீடிப்பு நாளையுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் தொடர்ந்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்காக மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X