2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பெண் ஊழியரிடம் சேஷ்டை: மூவர் கைது

George   / 2016 மே 12 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் சேஷ்டை செய்ததாக கூறப்படும் மூவரை புதன்கிழமை (11)  கைது செய்துள்ளதாக தெரிவித்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், அவர்களிடமிருந்து 3 போத்தல்கள் கள்ளையும் கைப்பற்றியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர், புதன்கிழமையன்று கடமைக்கு சென்றுகொண்டிருந்த போது, வீதியில் நின்றுக்கொண்டிருந்த மூவர், அப்பெண்ணிடம் சேஷ்டை புரிந்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பித்து, வைத்தியசாலைக்கு சென்ற அப்பெண், வீதியில் தனக்கு நேர்ந்ததை வைத்தியசாலை பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார். 

பணிப்பாளர் இதுதொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து விரைந்துசெயற்பட்ட பொலிஸார். குறித்த இடத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த மூவரை கைதுசெய்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 3 போத்தல் கள் கைப்பற்றப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில்; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X