2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பெண்கள் தொடர்பில் விசேட செயற்திட்டம் அவசியம்

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் நிலையிலுள்ள பெண்களை உள்ளடக்கியதான விசேட செயற்திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தற்போது நடைமுறையில் உள்ள பொதுவான உதவித் திட்டங்களின் மூலமாக தங்களுக்குரிய பல்வேறு தீர்வுகளைப் பெற இயலாத நிலையிலேயே குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு நிதி உதவிகளை வழங்க முன்வருகின்ற நிறுவனங்கள் கொடுத்த நிதியை மீளப் பெற்றுக்கொள்வதில்  அக்கறை காட்டுகின்றன.

எனினும், இப் பெண்கள் அந் நிதியைக் கொண்டு தங்களது வாழ்வாதாரங்களை நிலைநிறுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை சமூகப் பொறுப்பாக நினைத்து வழங்க இந் நிறுவனங்கள் முன்வராததால், நிதியைப் பெறும் பெண்கள் அவற்றை மீளச் செலுத்த இயலாமல் கடனாளிகளாக மாறும் நிலைமைகள் தொடருகின்றன.

அத்துடன், இப் பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட வேண்டியுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு, இப் பெண்களுக்கான விஷேட நிவாரணங்கள், உதவித் தொகைகள், உதவித் திட்டங்கள், உளவியல் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் ஆலோசனைகள் என்பன அனைத்தும் அடங்கும் வகையிலான ஒரு விசேட செயற்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X