Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 17 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் திணைக்களம் போதிய அளவு நியமிக்காத காரணத்தால் பெண்கள், சிறுவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் பெற்று சென்றிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதிலாக அப் பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்ட பெண் பொலிஸ் ஆளணியில் சடுதியான குறைவு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்குரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏ-தர பொலிஸ் நிலையத்தில் இருந்து சீ-தர பொலிஸ் நிலையங்களில் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரே கடமையில் ஈடுபட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இருவரும் இளவாலையில் இருவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தருமே கடமையாற்றுகின்றனர்.
மேலும் யாழ். மாவட்டத்தில் உள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களிலும் இதே நிலமை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் விடுமுறையில் சென்றால், மற்றைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அருகில் உள்ள பிற பொலிஸ் நிலையத்தில் தங்குமாறு பொலிஸ்மா அதிபரால் அறிவுத்தப்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரங்களில் பெண்கள், சிறுவர் தொடர்பிலான விசாரணைகளை ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களே மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், பெண்கள் அசௌகரியங்ளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
ஆளணி பற்றாக்குறை தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது யாழ். மாவட்டத்தில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களில் தலா 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது அதனை விட குறைவாகவே நியமனங்கள் காணப்படுகின்றன.
மேலும், கடந்த வருடம் பொலிஸ் கல்லூரியில் இருந்து வெளியேறிய 10 தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காலி, மாத்தறை பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
37 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
6 hours ago