2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 வர்த்தகர்கள் கைது

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
 
மன்னார் பஸார் பகுதியில் பாதசாரிகளுக்கு இடையூரை ஏற்படுத்தும் வகையில் தமது விற்பனை பொருட்களை மக்கள் நடமாடும் பகுதியில் பரவி விற்பனை செய்த 8 வர்த்தகர்களை மன்னார் பொலிஸார் இன்று (15) திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளதோடு மக்கள் நடமாடும் பகுதியில் போடப்பட்ட பொருட்களையும் மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட பொலிஸ் பிரிவினர் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் பஸார் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது மன்னார் பஸார் பகுதியில் உள்ள 8 வர்த்தகர்கள் நடை பாதையில் தமது வியாபார பொருட்களை பரப்பி பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில், தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கொண்ட பொலிஸ் பிரிவினர், பாதசாரிகள் நடமாடும் பகுதியில் பரவி வைக்கப்பட்டிருந்த பொருட்களை கைப்பற்றியுள்ளதோடு குறித்த 8 வியாபார நிலையங்களின் உரிமையாளர்களையும் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதோடு கைது செய்யப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் 8 பேரும் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த வர்த்தக நிலையங்களில் உரிமையாளர்கள் 8 பேரும் விசாரனைகளின் பின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு  குறித்த 8 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகவும் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X