2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொதுச்சந்தை புனரமைக்கப்பட வேண்டும்

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் பொதுச்சந்தைக் கட்டடத்தை புனரமைத்துத் தருமாறு முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் சங்கம் ஆகியன முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

2010ஆம் ஆண்டு மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து, இந்தக் கிராமத்தில் 325 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. இந்தக் கிராமத்துக்கான சந்தையானது முள்ளிவாய்க்கால் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால், பழைய சந்தைக் கட்டடம் சேதமடைந்த நிலையில் கைவிடப்பட்டு காணப்படுகின்றது.

அதனைப் புனரமைத்துத் தருவதன் மூலம் கிராமத்தின் பொதுத்தேவைக்கு அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X