Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 19 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
புத்தர் சிலை இருந்த இடத்தில், திடீரென அந்த சிலையை தூக்கிவிட்டு அந்த இடத்தில் நாகத்தின் சிலையை வைத்த சம்பவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.
இலங்கை மத்திய கலாசார நிதியம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு ஆகியன இணைந்து கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவின் தொடக்க விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.
கலையரங்குக்கு நுழையும் வாயில் அருகில் மத்திய கலாசார நிதியத்தால் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவுக்கு வழங்கப்பட்ட சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
விழா ஆரம்பமாக முன்னர், அந்த இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு வரவேற்பு இடம்போல் செய்யப்பட்டிருந்தது. விழா ஆரம்பமாக முன் ஊடகவியலாளர்கள் அந்த வரவேற்பை புகைப்படம் எடுத்தனர்.
விழா தொடங்கியதும், அந்த புத்தர் சிலையை அங்கிருந்து தூக்கிய ஏற்பாட்டாளர்கள், அந்த இடத்தில் நாகத்தின் சிலையை வைத்தனர்.
23 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
41 minute ago