2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பொதுநோக்கு மண்டபம் திறப்பு

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.கண்ணன்

ஒரு கிராமத்துக்கு  ஒரு மில்லியன் ரூபாய் வேலைத்திட்டத்தின் கீழ், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபம் கடந்த 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலாளர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

வெற்றிலைக்கேணி பகுதியில் இதுவரை காலமும் பொதுநோக்கு மண்டபம் இல்லாமல் பொது நிகழ்வுகளை நடாத்துவதில் இம்மக்கள் சிரமப்பட்டனர். தற்போது இப் பொதுநோக்கு மண்டபம் அமைக்கப்பட்டதால் தமக்கு பேருதவியாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X