2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பூநகரியில் புதைக்கப்பட்ட சடலங்கள் அகற்றப்பட்டனவா

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ள கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் கிராம அலுவலர் பிரிவுகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் முறையற்ற வகையில் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா செவ்வாய்க்கிழமை (19) அவ்விடங்களுக்குச் சென்று ஆராய்ந்துள்ளார்.

இதன்போது, அப்பகுதியில் நடைபெறுகின்ற காணி விற்பனை முறைகேடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் வெட்டுக்காட்டுப்பகுதியில் உள்ள கைலாயர் தோட்ட காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்க எடுத்த முயற்சிகளும் தடுக்கப்பட்டன.

இப்பகுதியில் அமைந்துள்ள காசி மீனாட்சி தோட்டத்தின் 43 ஏக்கர் காணிகளும் முன்னாள் நீதவான் விஸ்வலிங்கத்தின் 43 ஏக்கர் காணிகளும் வன்னி சூரி தோட்டத்தின்  50 ஏக்கர் காணிகளும் பெரிய தோட்டத்தின் 43 ஏக்கர் காணிகளும் அளவெட்டியான் தோட்டத்தின் 13 ஏக்கர் காணிகளும் அரச காணி 420 ஏக்கர் உட்பட 860 ஏக்கர் வரையான காணிகள் முறையற்ற வகையில் பெருபான்மையினத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன் இதற்கான முறையற்ற ஆவணங்கள்; அநுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இக்காணிகளை கொள்வனவு செய்த சிங்களவர்களுள் ஒருவரான தென்மராட்சிப்பகுதியில் பணிபுரிந்த அஜித் தென்னக்கோன் எனும் இராணுவ அதிகாரி, அண்மையில் இப்பகுதியில் புதையல் பூஜைகளை மேற்கொண்டதாகவும்  அதன்மூலம் அப்பகுதியில் ஏற்கனவே வரணிப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு அங்கு புதைக்கப்பட்ட சில பெண்களின் உடலெச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் சந்தேகம்  தெரிவித்தனர்.

இது தவிர பெரியதோட்டப்பகுதியில், பெருபான்மையினத்தவரால் விடுதிகள் அமைக்கும் முயற்சிகளையும் கல்வியமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

இவ்விடயங்கள் தொடர்பாக மாகாண முதலமைச்சரிடம் அறிக்கை ஒன்றை வழங்க இருப்பதாகவும்  பாரிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X