2025 ஜூலை 19, சனிக்கிழமை

ப.நோ.கூ. சங்கப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, கரைச்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்கள் புதன்கிழமை (13) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த 11 மாதங்களாக வேதனம் வழங்காமை, இருபத்தைந்து மாதங்களாக பணியாளர்களின் ஊழியர் சேமலாப நிதி அறவீடு செய்யப்பட்டும் சங்கம் உரிய திணைக்களத்துக்கு அனுப்பிவைக்காமல் தன்வசம் வைத்திருக்கின்றமை ஆகிய விடயங்களை கண்டித்தே இப்பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், தங்களுக்கு தகுந்த தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடருமெனவும் இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் மற்றும்  கூட்டுறவு உதவி ஆணையாளர் ஆகியோருக்கு மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் கரைச்சி கிழக்கு ப.நோ.கூ.சங்கத்தின் கீழ் எட்டு கிளைகள் இயங்கிய நிலையில், தற்போது நான்கு கிளைகளே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X