2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புனர்வாழ்வு அதிகார சபையின் நேர்முகத்தேர்வுகள்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு அதிகார சபையின் வீடமைப்பு கடன் மற்றும் சுயதொழில் முயற்சிகளுக்கான கடன் ஆகியவற்றை வழங்குதல் தொடர்பிலான நேர்முகத்தேர்வுகள், யாழ்.மாவட்டச் செயலகத்தில் நாளை 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளன. 

சுமார் 75 பயனாளிகள் கலந்துகொள்ளவுள்ள இந்த நேர்முகத்தேர்வுகளில் வீடமைப்புக் கடன் சம்பந்தமான நேர்முகத்தேர்வு, காலை 09.00 மணிக்கும் சுயதொழில் சம்பந்தமான நேர்முகத்தேர்வு, காலை 11.00 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளன.

புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர், செயற்பாட்டுப் பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர்கள், யாழ். மாவட்டச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .